அனுமதி / உரிமம் வழங்குதல்
- மரம் வெட்வதற்கான அனுமதிப் பத்திரம் வழங்குதல் (பலா மரங்கள் / ஈரப்பலா மரங்கள் / பெண் பனை )
- மரம் / மரத்தளபாட போக்குவரத்துக்கான அனுமதி வழங்குதல்
- மரம் வெட்வதற்கான அனுமதிப் பத்திர காலம் நீட்டிப்பு
- புதிய அடகு மையங்களை திறக்க அனுமதிப் பத்திரம் வழங்குதல்
- அடகு மையங்களின் அனுமதிப் பத்திரம் புதுப்பித்தல்
- மதுபான அனுமதிப் பத்திரம் வழங்குதல்
- விழாக்களில் மதுபானம் வைத்திருப்பதற்கான அனுமதி
- விலங்கு போக்குவரத்து அனுமதி வழங்குதல்
- துப்பாக்கி அனுமதிக்கான பரிந்துரை
- தென்னங் கள்ளு தயாரித்தல் அனுமதிப் பத்திரம் வழங்குதல்
- வணிக மற்றும் வணிகமல்லாத நோக்கங்களுக்காக மணல் கற்கள் மற்றும் மணல் அகழ்வாராய்ச்சி மற்றும் போக்குவரத்து
மரம் வெட்வதற்கான அனுமதிப் பத்திரம் வழங்குதல் (பலா மரங்கள் / ஈரப்பலா மரங்கள் / பெண் பனை )
தேவைப்படும் ஆவணங்கள்
- கிராம சேவகர் மூலம் அசல் சான்றிதழ் மற்றும் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்ட காணி பத்திரத்தின் பிரதி
- விண்ணப்பதாரருக்கு காணி உரிமை தெளிவாக இல்லாத பட்சத்தில், கிராம சேவகர் மூலம் உறுதிப்படுத்திய காணி உரிமையாளரின் விருப்ப கடிதம்
- பல வாரிசுகள் இருக்கும்போது விண்ணப்பதாரருக்கு வழங்குவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று நிரூபிக்கும் வாக்கு மூலம்
- ஒரு புதிய கட்டுமானத்துக்காக மரங்களை அகற்றுவதற்கு பொருத்தமான கட்டுமானத் திட்டம்
- அபாயங்கள் காரணமாக மரத்தை அகற்றுவதாயின் பிரதேச சபைகள் / நகர சபைகளின் கடிதங்கள்
- நிலம் சம்பந்தமான நீதிமன்ற தீர்ப்புகள் சம்பந்தப்பட்டிருந்தால் மற்றும் மரம் அகற்ற அவற்றுடன் தொடர்புடைய நீதிமன்ற உத்தரவுகள்
- மின்சாரக் கம்பித்தடங்கள் தொடர்பான இடைஞ்சல்கள் அல்லது எதிர்ப்பு தெரிவிக்கும் சந்தர்ப்பத்தில் அது பற்றி அறிவித்தமை தொடர்பான கடிதம்
- வேலி எல்லையில் மரம் அமைந்திருந்தால் பக்கத்து (எல்லை) உரிமையாளர் குறிப்பிட்ட மரத்தை அகற்ற எதிர்க்கவில்லை என கிராம சேவகர் உறுதிப்படுத்திய உறுதிப்படுத்திய கடிதம்
அனுமதிக் கட்டணம் - ரூ. 168.00
மரம் / மரத்தளபாட போக்குவரத்துக்கான அனுமதி வழங்குதல்
தேவைப்படும் ஆவணங்கள்
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
- மர தண்டுகள் , துண்டு மரம் அல்லது தளபாடம் பற்றிய கிராம உத்தியோகத்தர் அறிக்கை
- பலா/ ஈரப் பலா/ பனை வெட்டுவதற்கான அனுமதிப்பதிரம்
- கிராம சேவகர் சான்றளிக்கப்பட்ட மரம் துண்டு பண்ணுவதற்கான அனுமதிப்பதிரம்
- வனதள பரிந்துரை
- ரயில் மூலம் மரம் அல்லது தளபாடம் போக்குவரத்து செய்யும் போது போக்குவரத்திக்கான அசல் அனுமதி மற்றும் ரயில் துறை வழங்கும் அதிகாரப்பூர்வ ரசீது (வனதள பரிந்துரை, கிராம சேவகர் பரிந்துரைத தேவைப்படாத அதேவேளை உரிம கட்டணம் அறவிடப்பபடாது)
- மர தண்டுகள் , துண்டு மரம் அல்லது தளபாடம் ஆகியவற்றிற்கான கொள்வனவு செய்தமைக்கான ரசீது
மரம் வெட்வதற்கான/போக்குவரத்துக்கான அனுமதிப் பத்திர காலம் நீட்டிப்பு
தேவைப்படும் ஆவணங்கள்
- போலீஸ் புகாரின் அசல்
- அசல் அனுமிப்பத்திரம்
- போக்குவரத்து செய்யாத சந்தர்ப்பத்தில் கிராம சேவகர் சான்றிதழ்
புதிய அடகு மையங்களை திறக்க அனுமதிப் பத்திரம் வழங்குதல்
தேவைப்படும் ஆவணங்கள்
- கிராம உத்தியோகத்தர் அறிக்கை
- பொலிஸ் அதிகாரி அறிக்கை
- நிறுவனங்களை இணைத்தல் அசல் பதிவு சான்றிதழ் மற்றும் பிரதி
- சட்டத்தை மீரிய மற்றும் ஒழுங்கற்ற செயலில் ஈடுபடவில்லை என்ற வாக்குமூலம்
- தீ மற்றும் கொள்ளையிலிருந்து பாதுகாக்கும் காப்புறுதி சான்றிதழ் அசல் நகல் மற்றும் மற்றொரு பிரதி
- கூட்டு வியாபாரம் எனின் கூட்டு ஒப்பந்தம்
- வரி பத்திரத்தின் நகல்
அனுமிப்பதிப் பத்திரக் கட்டணம் - ரூ. 1000,00
பிணை - ரூ .100000.00
பதிவு கட்டணம் - ரூ. 25,000.00
அடகுக்கடை உரிமத்தைப் புதுப்பித்தல்
தேவைப்படும் ஆவணங்கள்
- கடந்த ஆண்டின் உரிமம் மற்றும் ஒரு நகல்
- ஒரு வருடத்திற்கான செல்லுபடியாகும் காப்பீட்டு சான்றிதழ் மற்றும் ஒரு பிரதி
- ஆண்டின் நிதி அறிக்கை மற்றும் அதன் பிரதி
- வாக்குமூலம்
அனுமதிப் பத்திரம் கட்டணம் - ரூ. 1000,00
வாகன வருவாய் உரிமம்/அனுமதிப் பத்திரம் வழங்குதல்
தேவைப்படும் ஆவணங்கள்
- பதிவு சான்றிதழ் அல்லது மோட்டார் வாகனங்கள் பதிவு திணைக்கம் வெளியிட்ட C.M.T. அல்லது 76 M.T.A.11 படிவம்
- காப்பீடு சான்றிதழ்
- கடைசியாக பெற்ற சான்றிதழ்
- புகை சோதனை அறிக்கை
மதுபான விற்பனை புதிய அனுமதி பத்திரம் வழங்குதல்
சுங்கவரி ஆணையாளரால் வழங்கப்பட்ட அனுமதிக் கடிதம் (வர்த்தமான அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட கட்டணம்)
மதுபான விற்பனை அனுமதி பத்திரத்தை புதுப்பித்தல்
தேவைப்படும் ஆவணங்கள்
- சுங்கவரி ஆணையாளர் வழங்கிய அனுமதிக் கடிதம்
- உதவி சுங்கவரி ஆணையாளர் வழங்கிய சான்றிதழ்
- உள்நாட்டு வருவாய் ஆணையாளர் மற்றும் மாகாண வருவாய் ஆணையாளர் ஆகியோரால் சுங்கவரி செலுத்தியமை தொடர்பாக வெளியிடப்பட்ட சான்றிதழ் மற்றும் அதன் பிரதியொன்று கடந்த ஆண்டு அனுமதிப்பத்திரம்
(வர்த்தமானி அறிவிப்பின் படி விகிதங்கள் மாறுபடும்.)
விழாக்களில் மதுபானம் வைத்திருப்பதற்கான அனுமதி
தேவைப்படும் ஆவணங்கள்
- அழைப்பு அட்டை
- கோரிக்கையின் கடிதம்
- கிராம உத்தயோகத்தரின் அறிக்கை
கள் அனுமதிப்பத்திரம் வழங்கல்
தேவைப்படும் ஆவணங்கள்
- முழுமையான டெண்டர் விண்ணப்பம்
- அசல் மதிப்பு சான்றிதழ்
- டெண்டர் விண்ணப்பப் படிவம் பெற்றுக்கொள்ளும் போது கிடைக்கும் அசல் ரசீது
துப்பாக்கி அனுமதிக்கான பரிந்துரை
தேவைப்படும் ஆவணங்கள்
- விண்ணப்பதாரரால் பூர்த்தி செய்யப்பட்ட மற்றும் கிராம சேவகர் மற்றும் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தினால் சிபாரிசு செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
மணல்/கணியம் அகழ்தலுக்கான அனுமதி
தேவைப்படும் ஆவணங்கள்
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்
- காணி உரிமைப் பத்திரத்தின் பிரதி.
- காணித் திட்டத்தின் பிரதி (கட்டாயமில்லை).
- விண்ணப்பதாரர் காணியின் உரிமையாளர் இல்லையென்றால், காணி உரிமையாளரிடமிருந்து பெறப்பட்ட ஒரு வாக்குமூலம் /சான்றிதழ் அல்லது வரி அறிவிப்பு சமர்ப்பிக்கப்பட வேண்டும்















