எமது நோக்கு
மக்களின் வாழ்க்கை முறைகளுக்கு உதவி செய்வதினூடாக சமூகத்திற்கு நன்மை பயக்கக்கூடிய சமுதாயமொன்றிற்கு வழி சமைக்கும் உயரிய அரச நிறுவனமாக இருத்தல்.எமது கொள்கை
அரச கொள்கைகளை கடைப்பிடிப்பதனூடாக சமூக வளங்களை இனங்கண்டு அவற்றை மக்களின் பங்களிப்புடன் பொருத்தமான அபிவிருத்தி செயன்முறையை திட்டமிடலின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்த செயற்திறன் மிக்கதும் பயனுறுதிமிக்கதுமான சேவையினை மக்களுக்கு வழங்கல்.ரிதீகம பிரதேச செயலகத்தின் வரலாறு
மாதுற கோறளை , இஹல விசிதெகே நகநஹிர கோறளை, மற்றும் ஹேவாவிஸ்ஸ கோறளை என்பனவற்றை ஓன்று படுத்தி 1974 இல் நிறுவப்பட்ட வருமானக் கட்டுப்பட்டுப் பிரதேசம், ரிதீகம நிரிவாகத் தொகுதி என அறிமுகம் செய்யப்பட்டது. இது, கிழக்கில் மாத்தளை மாவட்டத்தினாலும், மேற்கில் தற்போதைய மாவத்தகம பிரதேசத் செயலகத்தினாலும், வடக்கில் தற்போதைய இப்பாகமுவ பிரதேசத் செயலகத்தினாலும் மற்றும் தெற்கில் கண்டி மாவட்டத்தினாலும் சூழப்பட்டுள்ளது.
40 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்ட இந்த நிர்வாகத் தொகுதியின் முதல் வருவாய்க் கட்டுப்பாட்டு அதிகாரி திரு . லலித் ஹீன்கம ஆவார். 1975 இல் அவர் இடமாற்றம் செய்யப்பட்டு திரு. எஸ். தெமடபிடிய அவர்கள் இப்பதவியை ஏற்றார்.அச்சமயம், பிரதேச வருவாய் கட்டுப்பாட்டு அலுவலகம் ஹேவாவிஸ்ஸ கோரலையின் கவிசிகமுவா சந்தியில் உள்ள ஒரு தனியார் குடியிருப்பில் அமையப்பெற்றிருந்தது. பிறகு அலுவலகம் மதுரை கோரலையின் ரம்புக்கந்தன பகுதியில் உள்ள ஒரு தனியார் குடியிருப்புக்கு மாற்றப்பட்டது.
திரு. எஸ். தெமடப்பிடிய அவர்கள் 1975 முதல் 1980 வரை 5 வருடங்கள் அதே பதவியை வகித்தார். 1980 இல் திரு. வில்பெர்ட் கொடவெல பிரதேச வருவாய்க் கட்டுப்பாட்டு அதிகாரியாக கடமையேற்றார். அதே சமயம் டி.சி.பி நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஒரு புதிய அலுவலகக் கட்டுமானப் பணி ஆரம்பிக்கப்பட்டு செப்டெம்பர் 22 1980 ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது. அதே நேரத்தில் பதவிப் பெயர் உதவி அரசாங்க முகவர் எனவும் காரியாலயப் பெயர் உ.அ.மு. அலுவலகம் எனவும் பெயர் மாற்றப்பட்டது.
1987 இல் கிராம சேவை அலுவலகர் பதவிக்கு விசேட சேவை அலுவலகர் பதவியை உள்ளடக்கியதன் விளைவாக உ.அ.மு. பிரதேசம் 60 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டு சீரமைக்கப்பட்டது. 9 வருட கால சேவையின் பின், உ.அ.மு. வில்பெர்ட் கொடவெல இடமாற்றம் செய்யப்பட்டார். அதிகாரப் பரவலாக்கத்தின் காரணமாக, பதவிப் பெயர் "பிரதேச செயலாளர் " என மாற்றப்பட்டதுடன் காரியாலயப் பெயர் பிரதேச செயலகம் என மாற்றப் பட்டது. மேலும் இதன் கீழ் உள்ள கிராம சேவகர் பிரிவுகள் 113 ஆக உயர்த்தப்பட்டது. எனவே 1989 இல் திரு. ஆர் .எஸ்.டி வடுதந்திரி அவர்கள் ரிதீகம பிரதேசத்தின் முதலாவது பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இரண்டு வருட சேவைக்காலத்தின் பின் திரு. எஸ்.டி.ஜி லோரன்ஸ் அவர்கள் 1991 இல் பதவி ஏற்றார். அதே ஆண்டிலேயே அவர் இடமாற்றம் செய்யப்பட்டதால் உதவிப் பிரதேச செயலாளர் திரு. எ.பி.ஜி கித்சிறி அவர்கள் 1991 முதல் 1993 வரை, இரண்டு வருடங்கள் பிரதேச செயலாளராக பதிற் கடமை ஆற்றினார். 1993 முதல் 2004 வரையான காலப்பகுதியில் திரு. எம்.எம்.டப்.பி.பி. ஏகநாயக அவர்கள் தனது ஓய்வுக்காலம் வரை 11 வருடங்கள் பிரதேசத் செயலாளராகக் கடமையாற்றினார். இதன் பின்னர் திரு.எல்.எம் ரமயாசிரி அவர்கள் 2004 பதவியேற்று 2005 இடமாற்றம் செய்யப்பட்டார். பிறகு திரு. ஆர்.ஏ.எஸ். ஜயதிலக்க 2011 வரை 6 வருடங்கள் பிரதேச செயலாளராக சேவையாற்றினார். 2011 இல் திரு. ஆர்.எம்.பி ரத்நாயக்க அவர்கள் கடமையேற்று 2016 வரை சேவையாற்றி இடமாற்றம் செய்யப்பட்டார்.
அன்று முதல் 2019 முதற் காலாண்டு வரை திரு எம்.எஸ்.எம். நவாஸ் அவர்கள் பிரதேசத் செயலாளராக கடமை புரிந்தார். அப்போதிருந்து 2020 ஆம் ஆண்டின் இறுதி வரை திருமதி எம்.பி.டபிள்யூ ஷிரோமணி அவர்கள், பிரதேச செயலகம்-ரிதீகமவின் பிரதேச செயலாளராக தனது சேவையை வழங்கியுள்ளார். பின்னர் ஒரு குறுகிய காலத்திற்கு திரு.என்.ஏ.ஏ.எஸ்.பிரியங்கர அவர்கள் பிரதேச செயலாளராக சேவை வழங்கினார். அதன்பிறகு 2021 ஜனவரி 6 முதல் திரு.டபிள்யூ.ஜி.கே.டி விக்ரமசூரிய அவர்கள் தற்போதைய பிரதேச செயலாளராக தனது கடமையைத் தொடர்கிறார்.
1973 முதல் ரிதீகம பிரதேச செயலகத்தில் கடமை புரிந்த நிறுவனத் தலைவர்கள்
| பெயர் | முதல் | வரை |
| திரு லலித் ஹீன்கம | 1973 | 1975 |
| திரு எஸ். டெமடப்பிடிய | 1975 | 1980 |
| திரு வில்பெர்ட் கொடவில | 1980 | 1989 |
| திரு ஆர்.டி.எஸ். வடுதந்திரி | 1989 | 1991 |
| திரு எஸ்.டி.இ லோரன்ஸ் | 1991 | 1992 |
| திரு எ.பி.ஜி. கித்சிறி | 1992 | 1993 |
| திரு எம்.பி.டாப்.பி.பி ஏகநாயக | 1993 | 2004 |
| திரு எல்.எச். ரம்யசிறி | 2004 | 2005 |
| திரு ஆர்.எ.எஸ். ஜயதிலக்க | 2005 | 2011 |
| திரு ஆர்.எம்.பி ரத்நாயக்க | 2011 | 2016 |
| திரு எம்.எஸ்.எம். நவாஸ் |
2016 |
2019 |
| திருமதி. எம்.பி.டப் ஷிரோமணி | 2019 | 2020 |
| திரு.என்.ஏ.ஏ.எஸ்.பிரியங்கர | 2020 | 2021 |
| திரு.டபிள்யூ.ஜி.கே.டி விக்ரமசூரிய | 2021 | - |
![]() |
![]() |

















